Photobucket

வியாழன், 26 பிப்ரவரி, 2009

வெக்கை

















வெயிலில் மழைபோல்
வழியும்
உன் கோப விழிகளின்
கண்ணீர்துளிகள்..

குமுறும் வானமாய்
உன் மௌனத்தினுள்
வார்த்தைகள்..

பேசாமலும்
பேசிவிட முடியாமலும்
தாழ்ந்துயரும் உன் பொறுமையின்
அளவுகோடுகள்..

ஆதிக்க செருக்கில்
முகம்சுழித்த சொற்களால்
என் குடும்பத்தார்
உன் இதயம் கிழித்த
தருணங்களில்...

நானும்-
அமைதியாய் தானிருந்தேன்
உன் அவமானங்களை
கண்டும் காணாத கயவனாய்...

வெயில் காற்று சுடும்
மின்சாரமற்ற
இந்த இரவில்..

அழுது அழுது
ஆழ்ந்த தூக்கத்தில் எழுந்து
'வெக்கையா ?'
'விசுறவா ?' என்கிறாய்..

பதிலற்று குற்ற உணர்வில்
நீர் தெளித்த பூவாய்
ஈரமாயின என் இமைகள்..

உன் மனதுக்குள் இருக்கும்
வெக்கைக்கு
யார் விசுறுவது ?

- ஆதி

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உண்மையிலேயே கவிதை மிக அழகு ஆதவா.. குடும்பத்தாரின் சொற்களால் மனம் முழுதும் புழுக்கமாகிப்போன அவள்...

இயற்கையில் சூட்டால் உடல் புழுக்கமாகிப்போன அவன்...

இவள் அவனை நோக்கி ஆதரவாய் வீசுகிறாள்... வார்த்தைகளை!

இவனோ?!!!! பல ஆண்களை பிரதிபலிக்கிறான்!!

வாழ்த்துக்கள்! ஆதி!

பெயரில்லா சொன்னது…

பின்னூட்டம் இடும் போது `மேலே உள்ள படத்தில் காணப்படும் எழுத்துக்குறிகளைத் தட்டச்சு செய்க` என்று வருகிறது அதை நீக்கினால் இலகுவாக பின்னுட்டம் இடலாம் ஆதி

ஆதவா சொன்னது…

உண்மையிலேயே கவிதை மிக அழகு ஆதவா..



என்னங்க... ஆதின்னு டைப் அடிக்கும்போது ஆதவான்னு வந்திடுச்சா...... ஹி ஹி ஹி...



முன்பே படித்திருந்தாலும் வலையில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி!!! aathi!!

பின்னூட்ட முறையினை மாற்றிக் கொள்ளுங்கள்...

ஆதவா சொன்னது…

shii!! அப்படியே ஓட்டு போட்டுடுங்க.... கவிதை நல்லா இருக்குல்ல...

ஆதி சொன்னது…

//குடும்பத்தாரின் சொற்களால் மனம் முழுதும் புழுக்கமாகிப்போன அவள்...

இயற்கையில் சூட்டால் உடல் புழுக்கமாகிப்போன அவன்...

இவள் அவனை நோக்கி ஆதரவாய் வீசுகிறாள்... வார்த்தைகளை!

இவனோ?!!!! பல ஆண்களை பிரதிபலிக்கிறான்!!

வாழ்த்துக்கள்! ஆதி!//

அழகிய பின்னூட்டம் ஷீ, வாழ்த்துக்கு நன்றிகள் பல

ஆதி சொன்னது…

//பின்னூட்டம் இடும் போது `மேலே உள்ள படத்தில் காணப்படும் எழுத்துக்குறிகளைத் தட்டச்சு செய்க` என்று வருகிறது அதை நீக்கினால் இலகுவாக பின்னுட்டம் இடலாம் ஆதி//

கவனிக்கிறேன் ஷீ..

ஆதி சொன்னது…

//உண்மையிலேயே கவிதை மிக அழகு ஆதவா..



என்னங்க... ஆதின்னு டைப் அடிக்கும்போது ஆதவான்னு வந்திடுச்சா...... ஹி ஹி ஹி...



முன்பே படித்திருந்தாலும் வலையில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி!!! aathi!!

பின்னூட்ட முறையினை மாற்றிக் கொள்ளுங்கள்...//

"ஆதவா"னு பார்த்ததும், ஷீ எந்த கவிதை படிச்சாலும் ஆதவா ஞாபகம் தான் வருமா உங்களுக்கு னு கேக்க நினைச்சேன், நீங்க முந்திக்கிட்டிங்க ஆதவா :)

நிச்சயம் என் பின்னூட்ட முறைகளை மாற்றக் கொள்கிறேன் ஆதவா..