Photobucket

வியாழன், 26 பிப்ரவரி, 2009

பேனாவும் பெண்விழியும் - சிலேடை1




நீண்டிருக்கும் சுற்றும் நிலம்நோக்கும் மைப்பூணும்
ஆண்டிருப் போனாட்சி சாய்க்கும் ஜெகமதிர்த்தும்
சொல்லா தனசெய்யும் சொல்லுக பேனாவும்
பொல்லாத பெண்விழியும் ஒன்று!

பிகு:- பேனா - ballpoint என கொள்க.. தவறுகள் இருந்தாலும் சுட்டுக மக்கா..


நீண்டிருக்கு
ம் - நீளமாக இருக்கும்

சுற்றும் - எழுதுகையில் பேனாவின் முனை சுற்றும் / சுற்றும் விழி சுடரே :)

நிலம்நோக்கும் - எழுத முனைகையில் நிலம் நோக்கும் / நாணத்தில் இமை மடுத்து நிலம் நோக்கும்

மைப்பூணும் - மை நிரப்பில் கொள்ளும் / மை தீட்டுவர்


ஆண்டிருப்போன் ஆட்சி சாய்க்கும்
- பத்திரிகைகளின் எழுத்தாலோ எத்தனையோ ஆட்சி மகுடங்கள் மாறி இருக்கின்றன / காதலுக்காக மகுடம் துறந்தவர் பலர் உளர்


ஜெகமதிர்த்தும்
- புரட்சி எழுத்துக்கள் சரித்திரங்களை புரட்டி போட்டிருக்கின்றன / அபிநய விழிகள் அவையை அதிர செய்யும் (பரதத்தில்)

சொல்லாதன செய்யும் - மேலே குறிப்பிடாத இன்னும் பலவற்றையும் செய்யும்


சொல்லுக பேனாவும் பொல்லாத பெண்விழியும் ஒன்று!
- ஆகையால் சொல்லுக பேனாவும் வயப்படுத்தும் பெண்விழியும் ஒன்று என்று

2 கருத்துகள்:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

அழகான சிலேடை!

நண்பனொருவன் கல்லூரியில் பயிலும்போது, பெண்ணையும் மீனையும் இணைத்து அழகான சிலேடைக்கவிதை எழுதியிருந்தான். அதற்குப் பின் இப்போதுதான் மீண்டும் ஒரு சிலேடையை ரசிக்கிறேன்.

- ப்ரியமுடன்
சேரல்

ஆதி சொன்னது…

வாங்க சேரல், வருகைக்கும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்..