செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

முற்றம்தென்னை நிழல் விழும்
உன் முற்றத்தை
நீ கூட்டும்
அழகே தனி.

அந்த நளினத்தில்
கரைய
நானும்
என் காதலும்
பார்வை
தவமிருப்போம் தினம்.

ஈர குழல் முடிந்து
நீல தாவணியில்
நீ வந்து...

தரை கூட்டி
தெள்ளிய தண்ணீர் தெளித்து
வெள்ளிய கோலம் இடுகையில்
நீர்வார் நெற்றியை
உன் புறங்கையால் துடைப்பாய்..

அப்பொழுது
என்னை வெளியேறி ஒருவன்
உலக காற்றை
குளிர்த்தும் விசிறியும்..
மொத்த வெயிலையும்
மறைக்கும் குடையும்..
உனக்கு கொணர்வான்..

நேற்று வெயில் விழும்
முற்றத்தை கூட்டி திரும்பினாய்
என் மனைவியாய்...
ஒருத்தனும் வெளிவரவில்லை
உனக்கு விசுறவும்..
ஒரு டம்ளர் தண்ணீர் தரவும்..

5 கருத்துகள்:

ஆதவா சொன்னது…

வாருங்கள் ஆதி!!! உங்கள் தளம் எளிமையாக இருக்கிறது. கேட்ஜெட்களை சேர்த்து அழகுபடுத்துங்கள்.

தமிழிஷ் www.tamilish.com இல் இணைந்து ஓட்டு பெட்டியை பெற்றுக் கொள்ளுங்கள்.. பல திரட்டிகள் உள்ளன. (என் தளத்தில் 'கூடு'பார்க்கவும்) அவற்றில் இணைந்து கொள்ளுங்கள்.

பின்னூட்டம் இடும் முறையை மாற்றிக் கொள்ளுங்கள்.

மற்ற வலைஞர்களுக்குப் பின்னூட்டமும் வாக்கும் கொடுப்பதன் மூலமும் உங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்...

ஆதவா..

ஆதவா சொன்னது…

உங்கள் தளத்தில் தமிழ்மணம் வாக்குப் பட்டையும் இல்லை... கவனிக்க.....

ஆதி சொன்னது…

நிச்சயம் செய்கிறேன் ஆதவா..

ஷீ-நிசி சொன்னது…

கவிதை அழகு! தளமும் அழகு!

வாழ்த்துக்கள் ஆதி!

ஆதி சொன்னது…

வாங்க நிசி, தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல..