ஞாயிறு, 15 ஜூலை, 2012

அபயக்குர‌ல்
இந்த தெருவில் வசிப்போர் யாவரும்
என் கூக்குரலுக்கு செவிமடித்தாரில்லை

என் அலறலையும் கூச்சலையும்
பொருட்படுத்தினாரில்லை

உரத்து கத்தி
ஓங்கி அறைந்தும்
இந்த வீட்டின் கதவை திறந்திட
யாரும் முன்வந்தாரில்லை

தாளமுடியாததாக இருக்கிறது இந்த தனிமை
அச்சமுறுத்துவதாக இருக்கிறது இந்த வெறுமை
என் குரலுக்கு செவிமடித்து
தயைகூறுங்கள்

யாரேனும் வாருங்கள்
இதை வாசிக்கிற
நீங்களேனும் என் மன உணர்வை புரிந்து கொள்ளுங்கள்
என்னை அடைத்திருக்கும்
அந்த வீட்டின் கதவை திறவிடுங்கள்

என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்
என்னோடு கைகுலுக்குங்கள்
எதனை பற்றியாவது கொஞ்ச நேரம் உரையாடலாம்
உங்கள் குழந்தைகளை என்னுடன் விளையாடவிடுங்கள்
ஒதுக்காதீர்கள்
உங்கள் காஃபி மேஜயில் அமர்த்தி
உபசரிக்காவிடினும்
ஒரு முறுவல் பூத்திடுங்கள்
எனக்கு போதும்
நம்புங்கள்
உங்களுக்கு நான் உபத்திரம் தரமாட்டேன்

உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
யாருக்கும் கேட்பதில்லை இறந்தவர்களின் குரல்களென..
இதை வாசிக்கிற நீங்களேனும் இரங்குங்கள்...

1 கருத்து:

Athisaya சொன்னது…

என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்
என்னோடு கைகுலுக்குங்கள்
எதனை பற்றியாவது கொஞ்ச நேரம் உரையாடலாம்
உங்கள் குழந்தைகளை என்னுடன் விளையாடவிடுங்கள்
ஒதுக்காதீர்கள்
உங்கள் காஃபி மேஜயில் அமர்த்தி
உபசரிக்காவிடினும்
ஒரு முறுவல் பூத்திடுங்கள்
எனக்கு போதும்
நம்புங்கள்
உங்களுக்கு நான் உபத்திரம் தரமாட்டேன்ஃஃஃஃஃஃஃஃஃஃஃஅருமை சொந்தமே...இதைத்தான் இன்று பல குரல்களும் கெஞ்சுகின்றன..!அருமை.சந்திப்போம்.