Photobucket

சனி, 8 செப்டம்பர், 2012

சுவை


















என் தனிமைக்கும்
அழுகைக்கும் ஒரே சுவை

தனித்திருக்கையில் அழுகையா
அழுகையில் தனிமையா
எதுவென தெரியாமலே
இரண்டும் வந்து சேர்க்கின்றன‌

பொல பொலவென பொங்கி
முழுக்க பரவி
கணகணக்கும் கண்ணீரின் ஈரத்தில்
எடை கூடி கனக்க ஆரம்பிக்கிற தனிமை
சுமக்க முடியாததாகிறது

மேலும் உறைந்தொரு பனிக்கட்டியாய் மாறி
தன் குளிர்ச்சியின் கூரிய ஊசியை
உயிர் முடிச்சில் பாய்ச்சி
துடிதுடிக்கையில்
குரூரப்பார்வையோடு எக்களிக்கிறது

கூட்டித்தள்ளிவிட முடிகிற‌
உலர்ந்த சருகை போலவோ
தூசியை போலவோ
இருப்பதில்லை தனிமை
பெரும் பாறையை போல‌
பெயர்த்துடுக்க இயலாத வண்ணம்
அது பதிந்திருக்கிறது.

யாருக்கு தெரியும்
அந்த பாறைக்குள்
ஓடிக் கொண்டிடுமிருக்கலாம்
இன்னும் சிந்தாத கண்ணீரின் ஜீவநதி..

என் தனிமை ஒருநாள்
உன்னுடையதுமாய் ஆகும் போது
உனக்கும் ஐயம் எழுலாம்
எது அழுகையின் சுவையென!!!!

3 கருத்துகள்:

செய்தாலி சொன்னது…

உங்கள்
வலையை வலைச்சரம் மூலம் அறிந்துகொண்டேன்
நல்ல அர்த்த படலங்கலுள்ள கவிதை


கவிதைகள் எல்லாம் அருமை நண்பரே
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

அப்துல் காதர் சொன்னது…

தோழர் சிவஹரி வழங்கிய லீப்ஸ்டர் விருதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்!

காண்க: http://anbummanidhamum.blogspot.in/2012/09/blog-post_16.html

SOS சொன்னது…

தனிமை தரும் இன்பமும் சரி துன்பமும் சரி அலாதியானது தான், இன்னதென்று பிரித்தெடுக்க முடியாதவை... கவிதை எப்போதும் போல நன்று ஆதி... அட! இது என்ன அடிக்கடி வலைப்பூவின் தலைப்பும் டிசைனும் மாறிக்கொண்டே இருக்கிறதே!!!..