புதன், 16 பிப்ரவரி, 2011

உன் வீடு
உன் வீட்டின் கதவை தட்டுகையில் எல்லாம்
யாரோ புதுப்புது மனிதர்கள் கதவை திறக்கிறார்கள்

உன் பெயரை சொல்லி
வினவுகையில் எல்லாம்
சலிப்போடு கூடிய தலையசைப்போடும்
எரிச்சலோடு கூடிய முகச்சுழிப்போடும்
உதட்டை பிதுக்குகிறார்கள்..

அவர்களுக்கு எல்லாம்
உன்னைப்பற்றிய விசாரிப்புக்கள்
இந்த வாழ்வில் படர்ந்திருக்கும் இருட்டை போலிருக்கிறது

எத்தனையோ பேர் குடிப்பெயர்ந்துவிட்டாலும்
உன் வீட்டில் வெற்று சூன்யமே படர்ந்திருக்கிறது
நீ பெயர்ந்த பிறகு..

1 கருத்து:

அ.அப்துல் காதர் சொன்னது…

நல்ல கவிதை.. வாழ்த்துகள்..!

'குடிப்பெயர்ந்து விட்டாலும்' வேறு பொருள் தருவதாக உள்ளது. இதனை 'குடி வந்து போனாலும்' அல்லது 'குடியிருந்து போனாலும்' என மாற்றினால் பொருத்தமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.