Photobucket

வியாழன், 15 ஜூலை, 2010

தலைப்பற்ற கவிதை - 6




கானல் நீர் ஊறும் வெளியில்
இளைப்பார நிழல் தேடி
தன் நிழலை கண்டமர்ந்து
ஏமாந்து ஏமாந்து பறக்கிறது
வண்ணத்துப் பூச்சி காற்றின் வழியில்..

பொங்கி பொசுக்கும் வெயிலில்
மங்கும் சிறகுகளின் நிறங்களையும்
பொருட்படுத்தாது
நீள்கிறது அதன் தேடல்..

விரிந்திருக்கும் மணலின் வெஞ்சூட்டில்
நொடிந்து இரத்தம் சுண்டி சாகுமிடத்தில்
என்றைக்காவது முளைத்து கிளைக்கலாம் ஒரு மரம்
வண்ணத்துப் பூச்சியின் தேடலெதையும் அறியாமல்..

2 கருத்துகள்:

அப்துல் காதர் சொன்னது…

மரத்தையும் அதன் நிழலையும் தேடும் வண்ணத்துப் பூச்சியின் தேடலில் சோகம் தெரிகிறது. நகைமுரண் என்னவென்றால் இப்போதெல்லாம் வண்ணத்துப் பூச்சியையும் சேர்த்துத் தேட வேண்டியிருக்கிறது..!


நல்ல கவிதை, வாழ்த்துகள்..!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_11.html) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

(இன்னும் தங்களின் பல பதிவுகள் வலைச்சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன... படித்தேன்...)