புதன், 30 ஜூன், 2010

சூஃபி கவிதைகள் (தமிழில்) - 3

என்னை நீ நேசிக்கிறாயா ?

தான் நேசிப்பளிடம் காதலனொருவன்
"என்னைக்காட்டிலும் நீ
உன்னை மிக நேசிக்கிறாயா ?"
என கேட்டான்

நேசிப்பிற்குரியவள் சொன்னாள்:
"என் வாழ்வானது உன்னுடையது
ஏனெனில்
"நான்" என்பது மாய்ந்தாயிற்று
எனை பொருத்தமட்டில்"

என் இருப்பு உனக்கும் மட்டுமானதே
ஏனெனில்
என்னிலிருந்து, என் செயல்களிலிருந்து
நான் மறைவுற்றேன்..

உன்னறிதல்களில் இருந்தே
ஒரு மேதையாகினேன்
ஏனெனில்
நான் கற்றன யாவும் மறந்திழந்தேன்..

உன் பலத்தால்தான்
என்னால் யாவும் இயல்கிறது
ஏனெனில்
என் பலமனைத்தும் தொலைத்திழந்தேன்..

நான் எனை நேசிக்கிறேன் என்றாலும்
உன்னையே நேசிக்கிறேன்
நான் உனை நேசிக்கிறேன் என்றாலும்
என்னையே நேசிக்கிறேன்..

-ரூமி


---------------------------

Do You Love Me?


A lover asked his beloved,
Do you love yourself more
than you love me?The beloved replied,
I have died to myself
and I live for you.I’ve disappeared from myself
and my attributes.
I am present only for you.I have forgotten all my learning,
but from knowing you
I have become a scholar.I have lost all my strength,
but from your power
I am able.If I love myself
I love you.
If I love you
I love myself.

3 கருத்துகள்:

அரபுத்தமிழன் சொன்னது…

அனைத்தும் அருமை, 'ரூமி' பற்றி அறிவேன், இதற்கு முந்தைய 'ஹபீஸ்'
யாரென்று தெரியவில்லை. சூஃபி கவிஞர்கள் பற்றி சிறு குறிப்பும் இருந்தால்
மிக நன்றாயிருக்கும்.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

நல்லாருக்கு

ஆதி சொன்னது…

நன்றி அரபுதமிழன். நன்றி உழவன்.