திங்கள், 1 ஆகஸ்ட், 2011

உன்னிடம் என்ன இருக்கிறது ?
பசிப்பிணி குரலற்று
தன்னை தானே இந்த பூமியை
ஒருமுறையேனும் சுற்ற வைத்திட இயலுமா உன்னால் ?


ஒரு மரம் வெட்டப்படுவதை
ஒரு பறவை அல்லது விலங்கு வேட்டையாடப்படுவதை
ஒரு சிசு கொல்லப்படுவதை
ஒரு பெண் அல்லது சிறுமி கற்பழிக்கப்படுவதை
ஒரு குழந்தை அநாதரவாய் அல்லது பிச்சையெடுக்க விடப்படுவதை
ஒருவன் தூக்கிலப்படுவதை
ஒருவன் தற்கொலை புரிந்து கொள்வதை
ஒருவன் கொலை செய்யப்படுவதை
ஒருவன் திருடப்படுவதை
ஒருவன் நம்பிக்கை தூரோகத்துக்குள்ளாவதை
ஒருவன் ஏமாற்றப்படுவதை
ஒரு நாடு வறுமையால் கொள்ளை தொழில் உறுவ‌தை
ஒரு இனம் கொன்று குவிக்கப்படுவதை
என ஏதேனும் ஒன்று
நிகழ்தலிலிருந்து உன்னால் தடுத்துவிட இயலுமா ?

பிறகு
இவ்வுலகினுக்கு தர அல்லது செய்ய
உன்னிடம் என்ன இருக்கிறது ?

அன்பை தவிர....

5 கருத்துகள்:

thirumathi bs sridhar சொன்னது…

தங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/10/9102011.html

dafodil's valley சொன்னது…

அன்பு ஒன்றே தர இயன்ற ஒன்று என அழகாகவும் அழுத்தமாகவும் வெளியிட்டுள்ளீர்கள். நல்ல கருத்துமிக்க கவிதை அளித்தமைக்கு நன்றி.

தமிழ்தோட்டம் சொன்னது…

அழகிய வரிகள் பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

கோவை மு.சரளா சொன்னது…

அருமையான உணர்வுகளின் வெளிபாடு ...........வாழ்த்துக்கள்

ஆதி சொன்னது…

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல‌