வியாழன், 3 மார்ச், 2011

என்னோடு நான்

மனக்கரிச் சுவர்களில்
உன்னை வெள்ளையடித்தே
மீட்டுக்கொள்கிறேன்
என்னை..

கடந்து செல்லும் ஒவ்வொரு
காலத்துளியிலும்
உதிர்ந்து விழுகின்றன
வெவ்வேறு முகமூடிகள்..

வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
எவரோ எழுப்பிய வீட்டில்
யாரென்று தெரியாத என்னோடு..

1 கருத்து:

அ.அப்துல் காதர் சொன்னது…

எப்போதும் எஞ்சுவதென்னவோ சுய தேடல்தான்.. நல்ல கவிதை..!