திங்கள், 1 மார்ச், 2010

சொல்லப்படாத ஒரு காதல்
சொல்லப்படாத ஒரு காதல்
தன் கன்னிமையின் கர்வத்தோடு
இன்னும் இருக்கிறது
புதிதாய் எனக்குள்...


வழங்கப்படாத ஒரு பரிசைப் போன்று
அது பழமையடைவதில்லை..


பராமரிப்பின்றி கிடத்தப்பட்ட
ஒரு பொருளாக
தூசிப்படிவதுமில்லை..

ஒரு கிழமையில்
ஒரு தருணத்தில்
ஒரு நொடியில்
சொல்லப்படுவதற்காய்
காத்திருக்கிறது அது..

உனக்குள்ளும் இது போலொரு
சொல்லப்படாத காதல்
காத்திருக்கலாம்
எனக்காகவோ
வேறெவருக்காகவோ

4 கருத்துகள்:

Madurai Saravanan சொன்னது…

சொல்லி விட்டேன் வாழ்த்தை எங்கே சொல்லப்படத காதலைப் போல் ஆகி விடுமே என்று...வாழ்த்துக்கள்.

ஆதி சொன்னது…

மிக்க நன்றி மதுரை சரவணன்..

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

சாய் ராம் சொன்னது…

சொல்லப்படாத வார்த்தைகளை சுமந்தபடி திரிகிறோம் எங்கெங்கும்! எதோ ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் வார்த்தைகள் சுமையாகின்றன!

நன்றி! இப்போ தான் உங்க வலைப்பதிவிற்கு முதன்முறையாக வருகிறேன். நன்றாக இருக்கிறது. நன்றி!