Photobucket

புதன், 17 பிப்ரவரி, 2010

துரோகத்தின் கத்தி




முதுகில் ஆழப்பாய்ந்த
வலியோடு இரத்தம் சுவைத்திருந்தது
துரோகத்தின் கத்தி ஒன்று..

நேற்று
இதே கத்தி
எவரின் முதுகிலேயோ
உயிர்க் குடித்திருந்திருக்கலாம்..

நாளை
யாரோ ஒருவரின்
முதுகில் பாய
குறி வைத்துக்கொண்டிருக்கலாம்..

யாதொரு நேரத்திலும்
யாதொரு இடத்திலும் இருந்து
இந்த கத்தி பாய்ந்து வரலாம்
நம் நம்பிக்கைகளை
மணல் துகளாக்கியவாறு..

மற்றக் கத்திகள் போலில்லை
துரோகத்தின் கத்தி..
இது குத்தப்பட்டப் பிறகு
வெறுப்பை கக்குபவை..

உறவுகளின் மீதான நம்பிக்கையை
மறுப்பரிசீலனைக்கு உட்படுத்தி
சந்தேகத்தை உள்ளூற வைப்பவை..

யாவரும் ஏதாவது ஒரு தருணத்தில்
எவராவது ஒருவரால் குத்தப்பட்டு
இதன் கசப்பை அனுபவித்திருந்தாலும்
தம் மனதுக்குள் மறைமுகமாய்
வைத்திருக்கின்றனர் இதனை..

பயன்படுத்தியவர்
பயன்படுத்தாதவர் யாவரும் இதனை
கூர் தீட்டி தயார் நிலையில்
வைத்திருக்கின்றனர்
ஒரு முதுகை எதிர்பார்த்து..

பின் வரும் நாளின்
கோர கணமொன்றில்
எவரின் முதுகிலாவது
இதே கத்தி செருகப்படலாம்
கொடும் வன்மத்தின் அடையாளமாய்
என் கைரேகைகளுடன்..

4 கருத்துகள்:

கமலேஷ் சொன்னது…

மிக மிக அருமையான கவிதை...

எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...

துரோகத்தின் கத்தி யாவர் கையிலும் உண்டென்பதும் அதன் வீரியம் மனிதன் பொருத்து மாறும் என்பதும் உண்மைதான்...

ரொம்ப நல்லா இருக்கு ...வாழ்த்துக்கள்

தொடருங்கள்...

மதுரை சரவணன் சொன்னது…

thurokam super. hello naan kavithaiyai sonnen . super . vallththukkal.

ஆதி சொன்னது…

//மிக மிக அருமையான கவிதை...

எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...

துரோகத்தின் கத்தி யாவர் கையிலும் உண்டென்பதும் அதன் வீரியம் மனிதன் பொருத்து மாறும் என்பதும் உண்மைதான்...

ரொம்ப நல்லா இருக்கு ...வாழ்த்துக்கள்
//

நிதர்சனமான வரிகள் கமலேஷ்..

நன்றி கமலேஷ், பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும்

ஆதி சொன்னது…

//thurokam super. hello naan kavithaiyai sonnen . super . vallththukkal//

மிக்க நன்றி மதுரை சரவணன்..